என்எல்சி தலைவருக்கு மனிதவள ரத்னா விருது

என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யாவுக்கு தேசிய நிர்வாக மேலாண்மை நிலையம் வழங்கும் மனிதவள ரத்னா விருதை,

என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யாவுக்கு தேசிய நிர்வாக மேலாண்மை நிலையம் வழங்கும் மனிதவள ரத்னா விருதை, தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
 தேசிய நிர்வாக மேலாண்மை நிலையம் சார்பில், சவால் மிகுந்த தற்போதைய வர்த்தகச் சூழலில் மனித வளத் துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடக்கி வைத்தார்.
 மாநாட்டில், என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யாவுக்கு மனிதவள ரத்னா விருதும், என்எல்சி நிறுவனத்துக்கு சிறப்பான மனித வளக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனத்துக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்க, என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பெற்றுக்கொண்டார்.
 மாநாட்டில் என்எல்சி மனிதவள இயக்குநர் ஆர்.விக்ரமன், தேசிய நிர்வாக மேலாண்மை நிலையத்தின் தேசியத் தலைவர் சோமேஷ் தாஸ்குப்தா, சென்னை மையத் தலைவர் எஸ்.ராஜப்பன், கெüரவச் செயலர் எம்.ஹெச்.ராஜா ஆகியோர் பேசினர். மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 800 மனிதவள நிபுணர்கள் மற்றும் இந்தத் துறையில் உயர் கல்வி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர். மாநாடு சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com