தூய்மை சேவை இயக்கம் தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் தூய்மை சேவை இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் தூய்மை சேவை இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
 சுத்தமான, சுகாதாரமான புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசால் தூய்மை சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இந்த இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, தூய்மை சேவை உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதி எடுத்துக் கொண்டனர்.
 இதில், வீடு, கல்வி நிலையங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மையைக் கடைப்பிடிப்பது. திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற குடியிருப்புகளை உருவாக்குதல். திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவை உறுதிமொழியாக ஏற்கப்பட்டன.
 தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 2-ஆம் தேதி வரை "தூய்மை சேவை இயக்கம்' நடைபெற உள்ளது.
 இதில், 17-ஆம் தேதி தூய்மை ரதம் தொடக்கி வைக்கப்பட்டு கழிவறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும். 18-ஆம் தேதி முதல் 24 வரை மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்கள், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், பேரணி போன்றவை நடைபெறும். 25-ஆம் தேதி பொது இடங்களில் குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளுதல், 26-ஆம் தேதி முதல் அக்.1-ஆம் தேதி வரை சுற்றுலா தலங்கள் போன்ற முக்கிய இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் நடைபெறும்.
 மேலும், இந்தத் திட்டத்தில் சிறந்த முழக்கங்களை வரும் 1-ஆம் தேதிக்குள் 95008 62899 என்ற
 செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் அனுப்பி வைக்கலாம். சிறந்த முழக்கங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அக்.2-ஆம் தேதி மாவட்ட அளவில் கட்டுரை, ஓவியப் போட்டி, குறும்படங்கள் எடுத்தல், தூய்மைப் பணிகளை சிறப்பாக செய்தல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கு பரிசு வழங்கப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.ஆர்.ஜவஹர்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com