முதன்மைப் பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் முதன்மைப் பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் முதன்மைப் பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
 கடலூர் அருகே உள்ள சோனங்குப்பம் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையக்கட்டடத்தில் இப்பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
 அப்போது அவர் கூறுகையில், கடலூர் மாவட்டம், தானே புயல், சுனாமி போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் துவங்கவுள்ள வடகிழக்குப் பருவமழை காரணமாக அதிக அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ஸ்ரீசத்யசாய் பேரிடர் மேலாண்மை நிறுவனக் குழுவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
 இந்தப் பயிற்சியில் வெள்ளப்பாதிப்பின்போது பொதுமக்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக பாதுகாப்பது எப்படி என்பது குறித்து தெரிந்துகொண்டதை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும். இதனால் பொதுமக்களிடையே வெள்ளப்பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கடலூர் வட்டாட்சியர் ப.பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com