விடுதிக் காப்பாளரிடம் ரூ.3 லட்சம் திருட்டு

காட்டுமன்னார்கோவிலில் விடுதிக் காப்பாளரின் மோட்டார் சைக்கிள் பெட்டியிலிருந்த ரூ.3 லட்சம் திருடுபோனது.

காட்டுமன்னார்கோவிலில் விடுதிக் காப்பாளரின் மோட்டார் சைக்கிள் பெட்டியிலிருந்த ரூ.3 லட்சம் திருடுபோனது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கலிகடந்தான் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் விவேகன் (45). காட்டுமன்னார்கோவில் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மாணவர் விடுதிக் காப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், மாணவர்களின் அன்றாடச் செலவு, உணவு செலவுக்காக வெள்ளிக்கிழமை காட்டுமன்னார்கோவில் இந்தியன் வங்கிக் கிளையில் அரசு கணக்கிலிருந்து
ரூ.3 லட்சம் பணம் எடுத்துள்ளார். பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துள்ளார். பின்னர், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.
இதையடுத்து, பேருந்து நிலையத்தில் காத்திருந்த தனது துறையின் வட்டாட்சியரை விடுதிக்கு அழைத்து வருவதற்காக அங்கு சென்றார். பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள கடையின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து விவேகன் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் இருவர் விவேகனின் மோட்டார் சைக்கிளில் பெட்டியை திறந்து பணத்தை திருடிக்கொண்டு பைக்கில் சென்றது தெரியவந்தது. பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com