"தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும்'
By சிதம்பரம், | Published on : 16th April 2018 08:24 AM | அ+அ அ- |
தமிழ் இசைக்கு மாணவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும் என சீர்காழி கோ.சிவசிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையின் கௌரவ பேராசிரியரான சீர்காழி கோ.சிவசிதம்பரம், வெள்ளிக்கிழமை பல்கலை.யில் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் சே. மணியன் தலைமை வகித்து, இசையின் சிறப்பு பற்றி பேசினார். சிவசிதம்பரம் சிறப்புரையாற்றுகையில், மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேராசிரியர் சிவசிதம்பரத்தின் தந்தை சீர்காழி கோவிந்தராஜன், நுண்கலைப் புலத்தின் முதன்மையராக இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். துறைத்தலைவர் பேராசிரியர் டி.அருள்செல்வி நன்றி கூறினார்.