2 இளைஞர்கள் கடத்தல்: கிராம மக்கள் மோதல் 

வெள்ளாற்றில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கடத்தப்பட்டதால் இரு கிராமத்தினரிடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.

வெள்ளாற்றில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கடத்தப்பட்டதால் இரு கிராமத்தினரிடையே திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது.
 கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்துக்கும், அரியலூர் மாவட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ளாறு செல்கிறது. இதில், கடலூர் மாவட்டப் பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளாற்று பாதுகாப்பு சங்கம் அமைக்கப்பட்டது. அரியலூர் பகுதியிலிருந்து வந்து மணல் எடுப்பவர்கள் கடலூர் மாவட்ட பகுதிக்குள் இரவில் ஊடுருவி மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது.
 இதையடுத்து கிராமமக்கள் வெள்ளாற்றில் இரவு நேரப் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் அரியலூர் மாவட்டம், முள்ளுக்குறிச்சியை சேர்ந்த சிலர் ஆற்றில் மணல் அள்ளினராம். இதை செம்பேரியைச் சேர்ந்த பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, இளைஞர்கள் இருவரையும் மணல் அள்ளியவர்கள் தாக்கியதோடு தங்களது பகுதிக்கு கடத்திச் சென்றனராம்.
 தகவலறிந்த கிராம மக்கள், அரியலூர் மாவட்ட எல்லையில் புகுந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டு மாவட்ட போலீஸாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் கடத்தப்பட்ட இருவரையும் முந்திரிக்காட்டில் வைத்து தாக்கி விட்டு அங்கேயே விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் பலத்த காயத்துடன் ஊர் திரும்பியதை அடுத்து, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இரு மாவட்ட எல்லையிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com