தில்லைக்காளிக்கு மகாபிஷேகம் 

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்திபெற்ற தில்லைக் காளியம்மன் கோயிலில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு தில்லைக்காளிக்கு

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்திபெற்ற தில்லைக் காளியம்மன் கோயிலில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு தில்லைக்காளிக்கு மகாபிஷேகம் மற்றும் 204-ஆவது சிறப்பு அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகாலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என நம்பப்படுகிறது. சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவையும் செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகாபிஷேகத்தை திரளான பக்தர்கள் தரிசித்தனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com