கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், சொக்கன்கொல்லை கிராமத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் சார்பில் சி


குறிஞ்சிப்பாடி ஒன்றியம், சொக்கன்கொல்லை கிராமத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் (படம்) அண்மையில் நடைபெற்றது.
இந்தப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் 16 பேர் (ஜி-15), கிராமத்தில் தங்கியிருந்து சிறப்புப் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், குழு தலைவி டி.எம்.லதிகா தலைமையில் சொக்கன்கொல்லை கிராமத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சியில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
புவனகிரி கால்நடை மருத்துவமனை மருத்துவர் பி.முருகேசன் தலைமையிலான குழுவினர் குடல் புழு நீக்கம், சினை ஊசி மற்றும் நோய் தடுப்பு ஊசி அளித்து 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com