வைத்தியநாத சுவாமி கோயில் திருக்குளம் அளவீடு: ஆக்கிரமிப்பை அகற்ற ஆயத்தம்

திட்டக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான திருக்குளம், இடங்களை அளவீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.


திட்டக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான திருக்குளம், இடங்களை அளவீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலுக்கான திருக்குளம் மிகவும் தூர்ந்த நிலையில் உள்ளது. இந்தக் குளத்தை 31 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்தது.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோயில் நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவில்லை.
இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சியர் சத்தியனிடம் அண்மையில் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருக்குளத்தின் ஆக்கிரமிப்புகளை தாங்களாக முன்வந்து அகற்றிக்கொள்வதென ஆக்கிரமிப்பாளர்கள் கூறினர். தொடந்து திருக்குள ஆவணங்களை இந்து சமய அறநிலையத் துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென கூறப்பட்டது. இதனையடுத்து திருக்குள அளவீடு பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் சத்தியன் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர்கள் ஜெயசீலன், ராமர், வருவாய் ஆய்வாளர்கள், நிலஅளவைத் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினர், காவல் துறையினர் இணைந்து இந்தப் பணியில் ஈடுபடனர். இதில், கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் வருகிற 19-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவேண்டும். இல்லையெனில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
பின்னர், திருக்குளத்தின் எல்லைகள் அளவீடு செய்யப்பட்டு குறியீடு வரையப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com