மணல் குவாரி பிரச்னை: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

எனதிரிமங்கலம் மணல் குவாரி பிரச்னை தொடர்பாக வெள்ளிக்கிழமை  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எனதிரிமங்கலம் மணல் குவாரி பிரச்னை தொடர்பாக வெள்ளிக்கிழமை  பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பண்ருட்டி அருகே எனதிரிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைந்துள்ளது. இந்த குவாரியில் மணல் எடுப்பதற்கு பொதுமக்கள், பல்வேறு கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் கண்ணன் தலைமை வகித்தார். 
இதில் திமுக மாவட்ட பிரதிநிதி ராமு, பாமக சார்பில் மோகன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலர் த.ஆனந்த், நிர்வாகி சுரேந்தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெங்கடசாமி, மதிமுக நிர்வாகி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரித்து, அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படுமென கூறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com