வீரர்களை ஊக்கப்படுத்தும் கிராம விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

கிராம விளையாட்டுப் போட்டிகள் மூலம் வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருவதாக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.


கிராம விளையாட்டுப் போட்டிகள் மூலம் வீரர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருவதாக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கத்தில் கிராம விளையாட்டுப் போட்டிகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் உள்பட 550-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், கபடி, வாலிபால், 100மீ, 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் பங்கேற்றவர்களில் 240 மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 12,524 ஊராட்சிகளிலும் மாநில அரசு சார்பில் கிராம தடகள விளையாட்டு மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். போட்டிகளில் வெற்றி பெறாத வீரர்கள் சோர்வடையாமல் நன்கு பயிற்சி செய்து, வெற்றிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் சார்-ஆட்சியர் (பொ) சக்திவேல், பள்ளித் தலைமையாசிரியர் வரதராஜன், ஒன்றிய அதிமுக செயலர் பழனிச்சாமி, மாவட்ட விவசாயப் பிரிவு செயலர் காசிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட விளையாட்டு
அலுவலர் ராஜா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com