தொழில் தொடங்க ஒரே விண்ணப்பத்தில் அனைத்து அனுமதிகளையும் பெறலாம்: ஆட்சியர் தகவல் 

ஒரே விண்ணப்பத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார். 

ஒரே விண்ணப்பத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழ்நாடு வணிக வசதியாக்கல் சட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும் ஏற்கெனவே உள்ள தொழில்களை விரிவுப்படுத்துவதற்கும் தேவையான அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், ஒதுக்கீடுகள், புதுப்பித்தல்களுக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
 மேலும், வணிக உற்பத்தியை தொடங்குவதற்குத் தேவையான அனைத்து பதிவுகள், ஏற்பிசைவுகள், அங்கீகாரங்கள், உரிமங்கள், காலவரையறை புதுப்பித்தல்கள், உற்பத்தியை தொடங்குவதற்குத் தேவையான ஏற்பிசைவுகள், காலமுறை புதுப்பித்தல் ஆகியவற்றை ஒற்றைச் சாளர முறையில் ஒரே முனையில் ஒரே விண்ணப்பம் மூலம் அனைத்து விதமான அனுமதிகள், உரிமங்கள் குறிப்பிட்ட கால அளவுக்குள் பெற முடியும்.
 இதுதொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உறுப்பினராகவும் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட ஒற்றைச் சாளர குழு அமைக்கப்பட்டுள்ளது.
 மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
 எனவே, மாவட்டத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் தேவையான நகர் ஊரமைப்பு திட்ட கட்டட வரைபட அங்கீகாரம், மின் இணைப்பு, உள்ளூர் திட்டக் குழுமம் அங்கீகாரம், சுகாதாரத்துறை, தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல், மருந்துக் கட்டுப்பாட்டு அனுமதி உள்ளிட்ட 11 துறைகளின் அனுமதிக்கு ஒற்றைச் சாளர முறையில், தேவையான அனைத்து வணங்களுடன் "ஜ்ஜ்ஜ்.ங்ஹள்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய்" என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com