என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கோரி நிலக்கரி லாரிகள் சிறைபிடிப்பு

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலை வழங்கக் கோரி, தென்குத்து கிராம மக்கள் புதன்கிழமை பழுப்பு நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். 

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலை வழங்கக் கோரி, தென்குத்து கிராம மக்கள் புதன்கிழமை பழுப்பு நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
 என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் முதல் சுரங்கம் விரிவாக்கம் பகுதி அருகே குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்குத்து கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுரங்க விரிவாக்கப் பணிக்காக கிராமத்தைக் கையகப்படுத்த என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
 இந்த நிலையில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வீடு, நிலங்களைக் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு, இழப்பீடு வழங்கக் கோரியும், குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் வசதிகளை செய்து தரக் கோரியும் வாணதிராயபுரம் வெங்கடேசன் தலைமையில், சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பழுப்பு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தவகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை துணைப் பொது மேலாளர் தம்பி, நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்துச் சென்றனர்.
 இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் நிலக்கரி ஏற்றிய லாரிகள் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com