மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி: நெய்வேலி, செங்கல்பட்டு அணிகள் வெற்றி

சிதம்பரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் அண்கள் பிரிவில் நெய்வேலி அணியும், பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணியும் வெற்றி பெற்றன. 

சிதம்பரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் அண்கள் பிரிவில் நெய்வேலி அணியும், பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணியும் வெற்றி பெற்றன.
 சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் மின்னொளி ஜான்சி கூடைப்பந்துக் கழகம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் கடந்த 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றன.
 இந்தப் போட்டிகளில் சேலம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆர்.கேதார்நாதன் தலைமையில், ஏ.எஸ்.பி. என்.எஸ்.நிஷா தொடக்கி வைத்தார்.
 இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் நெய்வேலி விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் அணி முதலிடம் பெற்றது. முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 7 ஆயிரம் பரிசுத் தொகையும், நாவலர் கோப்பையும் வழங்கப்பட்டன.
 இரண்டாமிடத்தை தஞ்சை விளையாட்டு விடுதி மாணவர்கள் அணியும், மூன்றாமிடத்தை சிதம்பரம் பள்ளி மாணவர்கள் அணியும், நான்காம் இடத்தை மயிலாடுதுறை சாய் பள்ளி மாணவர்கள் அணியும் பெற்றன.
 இரண்டாமிடம் பெற்ற அணியினருக்கு ரூ. 4 ஆயிரம் பரிசுத் தொகையும், சபாபதிபிள்ளை கோப்பையும், மூன்றாமிடம் பெற்ற அணிக்கு ரூ. 4 ஆயிரம் பரிசுத் தொகையும், நான்காமிடம் பெற்ற அணிக்கு ரூ. 3 ஆயிரம் பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டன.
 பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு செயின் ஜோசப் பள்ளி மாணவிகள் அணி முதலிடம் பெற்றது. அந்த அணிக்கு ரூ. 7 ஆயிரம் பரிசுத் தொகையும், நாலவர் கோப்பையும் வழங்கப்பட்டன. இரண்டாமிடம் பெற்ற சேலம் பள்ளி மாணவிகளுக்கும், மூன்றாமிடம் பெற்ற சிதம்பரம் பள்ளி மாணவிகளுக்கும், நான்காம் இடம் பெற்ற மயிலாடுதுறை சாய் பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 பரிசளிப்பு விழாவுக்கு ஆறுமுக நாவலர் பள்ளிக் குழுத் தலைவர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட விளாயாட்டு - இளைஞர் நலன் அலுவலர் எம்.ராஜா முன்னிலை வகித்தார்.
 ஜான்சி கூடைப்பந்து கழகத் தலைவர் அணிகலன் வணிகர் பா.பழநி வாழ்த்திப் பேசினார். கயிலைச்செல்வர் எஸ்.ஆர்.ராமநாதன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நெய்வேலி கூடைப்பந்துக் கழக மேலாளர் எஸ்.முத்துக்குமார் நன்றி கூறினார். மாணவ, மாணவிகளுக்க பி.ஆர்.எம்.செந்தில்நாதன் சீருடைகளை வழங்கினார். விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா பயிற்சி நிலைய நிறுவனர் பி.என்.சபாநாயகம், நடராஜன், மகேஷ், உடற்கல்வி ஆசிரியர் எஸ்.எத்திராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com