என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் 9 கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு அளிப்பு

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 9 கழிப்பறைகள் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 9 கழிப்பறைகள் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்மையில் ஒப்படைக்கப்பட்டன.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், சுற்றுவட்ட கிராமப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.
அந்த வகையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிநீரோடை கிராமத்துக்கு நாரிழையால் வலுவூட்டப்பட்டு, நெகிழியால் உருவாக்கப்பட்ட மூன்று கழிப்பறைகளையும், கோரணப்பட்டு கிராமத்துக்கு 6 கழிப்பறைகளையும், ரூ. 3.32 லட்சத்தில் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்தக் கழிப்பறைகளை குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன் அண்மையில் மக்களின் பயன்ôபட்டுக்காக ஒப்படைத்த்தார்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவின் பொது மேலாளர்கள் ஜே.பீட்டர் ஜேம்ஸ், எஸ்.ஆர்.சேகர், துணைப் பொது மேலாளர் கே.ரமேஷ்
மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com