வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம், பெüர்ணமி பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம், பெüர்ணமி பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
 திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக, நடராஜர், சிவகாமசுந்தரி இருவரும் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு மூலகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.
 பெüர்ணமி பூஜை: மார்கழி மாதம் பெüர்ணமியை முன்னிட்டு பெரியநாயகி அம்பாள், கோயில் திருக்குளம் அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவையில் காட்சியளித்தார். மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். திருவதிகை அப்பர் இல்லம் அறக்கட்டளை சார்பில், பெüர்ணமியை முன்னிட்டு பரத நாட்டியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் சக்திகணபதி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி விஜயக்குமார் பங்கேற்று இயல், இசை, நாட்டிய மாணவிகளை கெüரவித்தார். தொழிலதிபர் எஸ்.வைரக்கண்ணு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அபிநயா நாட்டியாலயா, கவி கிருஷ்ணா மற்றும் கலைச்சோலை மாணவிகள் தரணிஸ்ரீ, ராகவி, கிருஷ்ணப்ரியா, காதம்பரி ஆகியோர் பரத நாட்டியம் நிகழ்த்தினர்.
 சிறப்புப் பேச்சாளர் மு.க.சங்கரன், ஆன்மிகமும் அறிவியலும் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சி, ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை ஊழியர் மூர்த்தி செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com