அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை மாணவர்கள் சாதனை

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான மங்கல இசைப் போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை மாணவர்கள் முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான மங்கல இசைப் போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை மாணவர்கள் முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர்.
 சென்னையில் தமிழக அளவிலான "மங்கல இசை' போட்டியை சென்னை நுண்கலை நிறுவனம் அண்மையில் நடத்தியது. தேர்வாளராக பத்மஸ்ரீ அரித்வார மங்கலம் ஏ.கே.பழனிவேல், கலைமாமணி மன்னார்குடி எம்.எஸ்.கே ங்கரநாராயணன் , எம்.எஸ்.கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக இசைத் துறையைச் சேர்ந்த நாகஸ்வர, தவில் பிரிவு மாணவர்கள் எஸ்.மஞ்சுநாத் (நாகஸ்வரம்), ஏ.கார்த்திகேயன் (தவில்) ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.
 பரிசை வென்றை மாணவர்களை பல்கலைக்கழகத்தன் துணைவேந்தர் எஸ்.மணியன் பாராட்டினார்.
 நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன், இந்திய மொழிப் புல முதல்வர் வி. திருவள்ளுவன், கலைப்புல முதல்வர் இ.செல்வராஜன், இசைத் துறைத் தலைவர் டி.அருட்செல்வி, இணைப் பேராசிரியர் சிவராஜ், உதவிப் பேராசிரியர் ஜி.பாபு ஆகியோர் பங்கேற்று போட்டியில் வென்ற மாணவர்களை வாழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com