கரும்பு விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

கரும்பு விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரும்பு விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில், கரும்பு விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி முகாம் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.நாட்ராயன் தலைமை வகித்து, பயிற்சியைத் தொடக்கிவைத்து, ஜீரோ பட்ஜெட் விவசாயம் தொடர்பாக விளக்க உரையாற்றினார். இணை இயக்குநர் (மத்தியத் திட்டம்) என்.கனகசபை முன்னிலை வகித்தார்.
 கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் மா.ஜெயச்சந்திரன், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் ஆர்.சம்பத்குமார், பேராசிரியர்கள் க.மாணிக்கம், சீ.துரைசாமி, எஸ்.கணபதி, ஆர்.அனிதா, வி.ரவிச்சந்திரன் ஆகியோர் கரும்பில் புதிய தொழில்நுட்பம், புது ரகங்கள், பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு, அறுவடைக்குப் பின்னர் பயிர் நேர்த்தி, உற்பத்தியை அதிகப்படுத்த இயற்கை வேளாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
 பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30 விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது, சர்க்கரை ஆலைகள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com