சொத்து வரி மறுமதிப்பீட்டை நிறுத்தக் கோரி அமைச்சர் வேலுமணியிடம் மனு

நகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சொத்து வரியை மறுமதிப்பீடு செய்யும் பணியை நிறுத்தி

நகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சொத்து வரியை மறுமதிப்பீடு செய்யும் பணியை நிறுத்தி
வைக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சென்னையில் அண்மையில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவையின் கடலூர் மாவட்டச் செயலர் சி.ராஜேந்திரன், பண்ருட்டி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலர் மோகனகிருஷ்ணன், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் அளித்த மனுவின் விவரம்: நகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில் எந்தவித முன்னறிவிப்பும், உத்தரவு நகலின்றி கட்டடங்களை அளவீடு செய்து, சொத்து வரி மறு மதிப்பீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 13 அரையாண்டுகளுக்கு வரிவிதிப்பு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே, சொத்து வரி மறு மதிப்பீடு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்.
உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரே முறை மட்டும் பதிவு, உரிமம் பெறும் வகையில் சட்ட விதிகளை மாற்றி அமைக்க மாநில, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு சட்ட திருத்தம் செய்யும் வரையில், தமிழக அரசு உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர்கள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பதிவு மற்றும் உரிமம் எடுக்கக் கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம், சொத்து வரி மறு மதிப்பீடு, உணவு வணிகர்கள் பதிவு, உரிமம் எடுக்காவிட்டால் சிறை தண்டனை போன்ற அதிகாரிகளின் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்ததரவு பிறப்பிக்க வலியுறுத்தியுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மனு அளித்த போது, சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com