பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
 இந்தக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.லாரன்ஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.அர்ச்சுணன், செயலர் த.கோகுலகிறிஸ்டீபன், பொருளாளர் எஸ்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர் ஏ.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும்.
 ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்க வேண்டும். வாலாஜா வாய்க்காலை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தெரு விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
 மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ருட்டி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
 கூட்ட தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையர், தமிழக முதல்வர், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மண்டல நிர்வாக இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com