சத்துணவு அமைப்பாளர்களுக்கான நேர்காணல் ரத்து

சத்துணவு அமைப்பாளர்களுக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.

சத்துணவு அமைப்பாளர்களுக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
 கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2017- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கான நேர்காணல் நடத்தப்பட்ட நிலையில், பல்வேறு முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனால், முடிவுகள் அறிவிப்பது நிறுத்திவைக்கப்பட்டது.
 இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்ததால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படவில்லை.
 தற்போதைய ஆட்சியர் வே.ப.தண்டபாணி ஏற்கெனவே நேர்காணல் நடைபெற்றதன் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது.
 அதன்படி, 55 சத்துணவு அமைப்பாளர்களுக்கு பிப்ரவரி 23, 24 -ஆம் தேதிகளிலும், 70 சமையல் உதவியாளர்களுக்கு பிப்ரவரி 27, 28- ஆம் தேதிகளில் நடைபெற்ற நேர்காணல் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. இந்தக் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com