தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

கடலூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி தெரிவித்தார்.
 கடலூர் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்.ஜி.செல்வராஜ், செல்வகுமார், திருமுருகன், ஆஷா கிறிஸ்டி எமரால்ட், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் இரா.முருகன் மற்றும் 304 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 கூட்டத்துக்குப் பின்னர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இஎம்ஐஎஸ் என்ற இணையதளம் மூலம் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் முழு விபரங்கள் இந்த மாத இறுதிக்குள் பதிவேற்ற செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 புதிய பாடத் திட்டத்தின் கீழ் 1, 6, 9, 11- ஆம் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 கடந்தாண்டை விட நிகழாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்களே தாமாக முன் வந்து காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆர்வத்துடன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
 காமராஜர் பிறந்த நாளை அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com