ஐடிஐ சேர்க்கை கலந்தாய்வு

கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் தொழில்பயிற்சி நிலையங்களுக்கான (ஐடிஐ) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் தொழில்பயிற்சி நிலையங்களுக்கான (ஐடிஐ) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐடிஐ மூலமாக பல்வேறு தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 4 அரசு ஐடிஐ, 23 தனியார் ஐடிஐ நிலையங்கள்
 செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேரும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வை கலந்தாய்வு முறையில் அரசு நடத்தி வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்திலுள்ள 27 ஐடிஐ-க்களுக்கான (பொறியியல் தொழில் பிரிவு) கலந்தாய்வு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு ஐடிஐ-யில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
 இதுகுறித்து கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2 ஆயிரம் இடங்களுக்கு 3,800 பேர் வரைவிண்ணப்பித்திருந்தனர். ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 400 பேர் வீதம் வரவழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதுவரை 514 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மற்ற இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 கலந்தாய்வு நிறைவு பெற்ற பின்னர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com