திட்டக்குடி திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம்

திட்டக்குடி திரெளபதி அம்மன் கோயில் தேர்த் திருவிழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

திட்டக்குடி திரெளபதி அம்மன் கோயில் தேர்த் திருவிழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
 திட்டக்குடி வெள்ளாற்றங்கரையில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 இதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதோடு, மாலையில் மகாபாரதம் கதை வாசிப்பு நடைபெற்று வந்தது. விழாவின் ஒருபகுதியாக அர்ச்சுணனுக்கும், நாக கன்னிக்கும் பிறந்த அரவானை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் திரெளபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் வீற்றிருக்க, பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
 தேர் உலா நான்கு வீதிகள் வழியாக நடைபெற்றது. விழாவில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்ததோடு, தேங்காய் உடைத்தும், நேர்ச்சைகள் செலுத்தியும் வழிபட்டனர். திருத்தேர் நிலையை அடைந்ததும் படிபூஜை செய்த பின்னர் அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளினார்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி பொறுப்பாளர்கள், இளைஞர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
 வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com