உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி (படம்) கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி (படம்) கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது.
 பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் அரசு செவிலியர் பள்ளி மாணவிகள், மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவமனை செவிலியர்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணி கடற்கரைச் சாலை வரை சென்றடைந்தது.
 முன்னதாக, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைவரும் ஏற்றனர்.
 நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஆர்.வசந்தி, துணை இயக்குநர் ஆர்.கலா, துணை இயக்குநர்கள் கே.ஆர்.ஜவஹர்லால் (சுகாதாரப் பணிகள்), கருணாகரன் (காசநோய்), அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.ஹபிசா, செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com