கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அரசுச் செயலரிடம் வலியுறுத்தப்பட்டது.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அரசுச் செயலரிடம் வலியுறுத்தப்பட்டது.
 கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அரசின் முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடியிடம், அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன், பொதுச் செயலர் மு.மருதவாணன் ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சாவடி, கெடிலம் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றி கெடிலம் கரையோடு இணைக்க வேண்டும்.
 நெல்லிக்குப்பம் சாலையில் சாவடி, செம்மண்டலத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். ஊராட்சி, நகராட்சிகளில் கட்டப்பட்டுள்ள மழைக்கான வடிகால்களின் மேற்புறம் மூடி அமைக்க வேண்டும்.
 சுங்கச் சாலைப் பணியை திட்டமிட்டபடி முழு அளவில் மேற்கொள்ள வேண்டும். கெடிலம் கரையின் இருபுறமும் தார்ச் சாலை அமைக்க வேண்டும்.
 அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான முகாமை அனைத்து ஊராட்சிகளிலும் துறைகளை ஒருங்கிணைத்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்துப் பிரதான சாலைகளிலும் பாதசாரிகள் நடந்துச் செல்ல நடைபாதை அமைக்க வேண்டும்.
 கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மின் மோட்டார்களை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளிலும், பொதுவான இடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டப்பட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com