நுண்ணீர் பாசனத் திட்ட முகாம்

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 9 கிராமங்களில் நுண்ணீர் பாசனத் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 9 கிராமங்களில் நுண்ணீர் பாசனத் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
 சொட்டு நீர்ப் பாசன முறையை அதிக பரப்பளவில் அமைக்க பாரதப் பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள மதனகோபாலபுரம், தியாகவள்ளி, உள்மருவாய், அரங்கமங்கலம், குருவப்பன்பேட்டை, ஆடூர் அகரம், தென்குத்து உள்ளிட்ட 9 இடங்களில் நடைபெற்றன. முகாம் நடைபெற்ற இடங்களிலேயே விவசாயிகள் மானியம் பெறுவதற்குத் தேவையான சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறுகுறு விவசாயி சான்றுகளை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று விவசாயிகள் பயனடைந்தனர்.
 வேளாண்மைத் துறை இயக்குநர் கிருபாகரன் தென்குத்து கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பாரதப் பிரதமரின் நுண்ணீர் மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
 மீனாட்சிப்பேட்டை, ஆடூர் அகரம் கிராமங்களில்ல் நடைபெற்ற சிறப்பு முகாமில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு பி-6 குழுவைச் சேர்ந்த 16 மாணவர்கள் இணைந்து செயல் விளக்கம் அளித்தனர். வேளாண்மை உதவி இயக்குநர் ப.சின்னக்கண்ணு சொட்டூ நீர்ப் பாசனத்தால் ஏற்படும் நன்மைகள், மானியம் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
 முகாமுக்கான ஏற்பாடுகளை குறிஞ்சிப்பாடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் தெய்வசிகாமணி, ராயப்பநாதன், ஆரோக்கியதாஸ், ராயர், முத்துராமன், அசோக் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com