கல்வித் துறை குறித்து புகார் அளிக்க சிறப்பு குறைதீர் கூட்டம்

கல்வித் துறை குறித்த புகார்களை அளிக்க சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.

கல்வித் துறை குறித்த புகார்களை அளிக்க சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
 தனியார் கல்வி நிலையங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் தொடர்கின்றன. கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் அரசின் ஒதுக்கீட்டின் படி இடம் வழங்காததோடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்திட ஏதுவாக சனிக்கிழமைகளில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிகளின் நடைமுறை குறித்து ஜூலை மாதம் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
 இதில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் சேர்க்கைக் குறித்த புகார், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்தல், பள்ளியிலிருந்து மாணவர்களை தேவையில்லாத காரணங்களைக் காட்டி மாற்றுச் சான்றிதழ் அளித்து வெளியேற்றுதல், பள்ளிகளில் சேர்க்கைக்கான இடம் இருந்தும் சேர்க்கை அளிக்க மறுப்பது, சேர்க்கைக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பது, கட்டாய நன்கொடை வாங்குவது, செலுத்திய பணத்துக்கு உரிய ரசீது அளிக்க மறுப்பது உள்ளிட்ட குறைகள் இருந்தால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்களது புகார்களை மனுக்களாக வழங்கலாம்.
 இந்தக் கூட்டம் வருகிற 16-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் வரை நடைபெறும் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com