காதில் பூவுடன் வந்த விவசாயி

சிதம்பரம் அருகே உள்ள வையூரைச் சேர்ந்த விவசாயி ம.சிவப்பிரகாசம் (59), தனது காதில் பூவையும், கழுத்தில் கோரிக்கை அட்டையும் அணிந்து குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். 

சிதம்பரம் அருகே உள்ள வையூரைச் சேர்ந்த விவசாயி ம.சிவப்பிரகாசம் (59), தனது காதில் பூவையும், கழுத்தில் கோரிக்கை அட்டையும் அணிந்து குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். 
கோரிக்கை அட்டையில், 2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி 21  முறை மனுக்கள் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை 31 முறை சந்தித்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
குறிஞ்சிப்பாடி விவசாயி குமரகுரு கூட்டத்தில் பேசுகையில், சித்த மருத்துவப் பயன்பாட்டுக்காக கஞ்சா செடிகள் சாகுபடிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.  இந்தக் கோரிக்கை ஆட்சியர் உள்ளிட்டோரை வியப்பில் ஆழ்த்தியது. கஞ்சா செடிகள் வளர்ப்புக்கு அரசு தடை விதித்துள்ளதால் அவற்றை வளர்க்க அனுமதியில்லை என ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com