சர்வதேச யோகா தின விழா

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் கடலூர் நகர அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற யோகா தின விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார். இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன்ராணி யோகா தினத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா, பிளஸ் தொண்டு நிறுவன நிர்வாகி எல்.எஸ்.அந்தோணிசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். யோகா பயிற்றுநர் ஆர்.திருநாவுக்கரசு பல்வேறு யோக பயிற்சிகளை வழங்கினார். இதில், பங்கேற்றவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக இளையோர் மைய கணக்காளர் டி.சக்கரவர்த்தி வரவேற்க,  தேசிய தொண்டர் இ.தியாகராஜன் நன்றி கூறினார்.
விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சர்வேதச யோகா தின விழாவுக்கு, பள்ளி தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அ.முருகன் வரவேற்றார். விவாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  ஒருங்கிணைப்பாளர் சுமதி நன்றி கூறினார். விருத்தாசலம் அருகே உள்ள மணலூர் ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளர் சீ.தாரா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜி.ராஜாமணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், யோகா குறித்த  நன்மைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com