அரசு மருத்துவமனையில் கண் நீர் அழுத்தப் பரிசோதனை

கடலூர் தலைமை அரசு கண் மருத்துவமனையில் கண் நீர் அழுத்தம் குறித்த இலவச பரிசோதனை முகாம் அண்மையில் தொடங்கியது.

கடலூர் தலைமை அரசு கண் மருத்துவமனையில் கண் நீர் அழுத்தம் குறித்த இலவச பரிசோதனை முகாம் அண்மையில் தொடங்கியது.
 கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மூலம் மார்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரை உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடலூர் தலைமை அரசு கண் மருத்துவமனையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கண் நீர் அழுத்தப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கலா தொடக்கி வைத்தார். கண்காணிப்பாளர் ஹபீசா முன்னிலை வகித்தார். கண் நீர் அழுத்த நோய் குறித்து கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளர் அசோக் பாஸ்கர் கூறியதாவது: கண்நீர் அழுத்த நோய் (கிளாக்கோமா) பார்வை நரம்பை சிறிது, சிறிதாகப் பாதித்து கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டோரில் 8-இல் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் கண் நீர் அழுத்த நோய் பாதித்த குடும்பத்தில் பிறந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள், சிறு வயதிலிருந்தே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை உள்ளவர்கள், கண்ணாடி அணிந்திருப்பவர்கள், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இருதய நோய் உள்ளவர்கள், கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு கண் நீர் அழுத்த நோய் வரலாம்.
 கடலூர் மாவட்டத்தில் 2013 முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 449 பேர் கண் நீர் அழுத்த நோய் குணமடைய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர் என்றார் அவர். எனவே, 40 வயதைக் கடந்த அனைவரும் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com