திமுக சார்பில் ரத்த தான முகாம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 66-ஆவது பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் தெற்குரத வீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 66-ஆவது பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் தெற்குரத வீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கட்சியின் நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ முகாமை தொடக்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அப்பு ஆர்.சத்தியநாராயணன் வரவேற்றார்.
 நகர அமைப்பாளர் மக்கள் அருள், நகர துணை அமைப்பாளர்கள் வி.திருமால், விபின், முத்துக்குமார், பால்ஸ்டோர் ரமேஷ், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், நகர அவைத் தலைவர் தென்னவன் எஸ்.கே.ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலர்கள் சி.பன்னீர்செல்வம், பி.பாலசுப்ரமணியன், பொருளாளர் ஏ.ஜாபர் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்புசந்திரசேகர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.சி.மணி, எம்.எம்.ராஜா, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தா.செல்வம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜராஜன், சி.க.ராஜன், ஜே.அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முகாமில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனை ரத்த வங்கி முதன்மை மருத்துவர் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மற்றும் கிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் நர்சிங் மாணவிகள் பங்கேற்று ரத்தம் சேகரித்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com