பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள்

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 கடலூர் மாவட்டத்திலிருந்து 218 பள்ளிகளைச் சேர்ந்த 30,952 பேர் பிளஸ்2 பொதுத் தேர்வை எழுதினர். புதன்கிழமை வெளியான தேர்வு முடிவுகளின் படி 26,833 பேர் தேர்ச்சிப் பெற்று 86.69 சதவீதத் தேர்ச்சியை பதிவு செய்தனர். மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகளை முதலிடம், இரண்டாமிடம் என்று வகைப்படுத்தக் கூடாதெனவும், அவர்களின் புகைப்படங்களை வெளியிடக் கூடாதெனவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1200 மொத்த மதிப்பெண்ணில் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் மாவட்டத்தில் 2 பேர் பெற்றுள்ளனர்.
 இந்த இரண்டு இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். அதேபோல, 1,151 முதல் 1,180 வரையிலான மதிப்பெண்ணை 59 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள் 43 பேர், மாணவர்கள் 16 பேர்களாவர். 1,126 முதல் 1,150 வரையிலான மதிப்பெண்ணை 109 பேர் பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 75 பேர்களாவர். 1,101 முதல் 1,125 வரையிலான மதிப்பெண்களை 168 பேர் பெற்றனர். இவர்களில் அதிகபட்சமாக 110 மாணவிகள் இந்த மதிப்பெண் எண்ணிக்கைக்குள் வந்துள்ளனர்.
 இதேபோல கூடுதலான மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில் மாணவிகள் அதிக இடம் பிடித்துள்ள நிலையில், 700 மற்றும் அதற்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் மாணவர்கள் 8,244 பேரும், மாணவிகள் 7,969 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
 தேர்வு எழுதிய மொத்தம் 16,521 மாணவிகளில் 14,822 பேரும், தேர்வு எழுதிய 14,431 மாணவர்களில் 12,011 பேரும் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com