தமிழ் உச்சரிப்பில் ஊர்ப் பெயரை மாற்றலாம்: மாவட்ட ஆட்சியர்

தங்களது ஊர்ப் பெயரை தமிழ் உச்சரிப்பில் மாற்ற விரும்புவோர் அதற்கான விவரங்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.

தங்களது ஊர்ப் பெயரை தமிழ் உச்சரிப்பில் மாற்ற விரும்புவோர் அதற்கான விவரங்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திடுவதற்கு (சான்றாக "திருவல்லிக்கேணி' என்பதை பழ்ண்ல்ப்ண்ஸ்ரீஹய்ங் என ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் பட்ண்ழ்ன்ஸ்ஹப்ப்ண்ந்ங்ய்ண் என்று குறிடுப்பிடுதல்) அறிவிப்பும், அதனை தொடர்ந்து அரசாணையும் தமிழக முதல்வரால் கடந்த ஜூன் மாதம் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிடப்பட்டது. 
 அதனடிப்படையில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்ப் பெயர்களை மாற்றி அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்  தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், கடலூர் மாவட்டத்திலுள்ள பதிவுத் துறை உயர் அலுவலர்கள், நில அளவை, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றின் உதவி இயக்குநர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகவும், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை ஒருங்கிணைப்பாளராகவும், உள்ளூர் தமிழறிஞர்கள் 3 பேரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் கொண்டு உயர்நிலைக்குழு அமைக்கப்பெற்றுள்ளது.
இப் பொருண்மைத் தொடர்பில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது மக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஊர்ப் பெயர் எழுத்துக்கூட்டலில் மாற்றம் வேண்டுவோர், தங்களது ஊர் அமைந்துள்ள வட்டம், ஊரின் பெயர் (தமிழில்), தற்போதுள்ள ஆங்கில எழுத்துக்கூட்டல், திருத்தி அமைய வேண்டிய ஆங்கில எழுத்துக்கூட்டல் என்ற வகையில் விவரங்களை தெரிவிக்க வேண்டும். 
இதுகுறித்த விவரங்களை, "இரா.அன்பரசி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலூர்-607 001' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும்,  ற்க்ஹக்ஸ்ரீன்க்க்ஹப்ர்ழ்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-292039 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com