பண மதிப்பிழப்பு நடவடிக்கை: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் கடலூர், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.1,000, ரூ.500 நோட்டுகளின் மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாகவும், பொதுமக்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர்கள் வேலுசாமி, திலகர், முருகன், வட்டாரத் தலைவர்கள் ரமேஷ், சீத்தாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்சி, எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது, உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பேசினர். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குமார் வரவேற்றார். 
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலர்கள் ரவிக்குமார், காமராஜ், பார்த்திபன், முருகன்,  கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் ஓவியர் ரமேஷ், மீனவரணி மாவட்டத் தலைவர்கள் கார்த்திக், பாலு நகர செயலர்கள் கோபால், தண்டபாணி, பாலகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காட்டுமன்னார்கோவில்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். நகரத்  தலைவர் அன்வர் வரவேற்றார். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளர்களாக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, பழனிச்சாமி, விஸ்வநாதன், செந்தில்நாதன், மாவட்ட  துணைத் தலைவர் நசிர் அகமது, ஆசிரியர் ராமன், முன்னாள் சேவாதள தலைவர் சரவணக்குமார், வட்டாரத் தலைவர்கள் பாபு, கண்ணன், சங்கர், சேரன், அன்வர், பாபுராஜன், ஜாகிர் உசேன், லால்பேட்டை நகரத் தலைவர் இதயத்துல்லா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், இளங்கீரன், கட்டாரி சந்திரசேகர், மகளிர் காங்கிரஸ் கரோலினா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com