புயல் தாக்கத்தை தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண்

கஜா புயலின் தாக்கத்தை தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்தால் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண் வெளியிடப்பட்டுள்ளது.

கஜா புயலின் தாக்கத்தை தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்தால் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) எண் வெளியிடப்பட்டுள்ளது.
 கஜா புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படும் இயற்கை பாதிப்புகளை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் செல்லும் வகையில் கட்செவி அஞ்சல் எண் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்செவி அஞ்சல் எண்ணை மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
 அதன்படி, பொதுமக்கள் 73057 15721 என்ற எண்ணிஸ் கஜா புயலால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களை பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தகவல் தெரிவித்தார். மேலும், 1077 என்ற இலவச தொலைபேசி அழைப்பிலும், 04142- 220700, 221113, 233933, 221383 என்ற தொலைபேசி எண்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் சம்பந்தமான தகவலைத் தெரிவிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com