மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: எம்எல்ஏ ஆய்வு

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், நீர் தேங்கும் இடங்களில் நடைபெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்  அண்மையில் ஆய்வு  செய்

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், நீர் தேங்கும் இடங்களில் நடைபெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்  அண்மையில் ஆய்வு  செய்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது பெரியகாட்டுப்பாளையம், விசூர் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மனி உயிரிழப்புகளும் ஏற்
பட்டன.
விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் மேற்கண்ட பகுதிகளில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, விசூர் வெள்ளவாரி ஓடை, பெரியக்காட்டுப்பாளையத்தில் உள்ள ஓடை பகுதிகளை எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது, மழைக்கால அவசரப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 
இதேபோல, மேல்காங்கேயன்குப்பம் ஊராட்சி, ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில்  தேங்கி நின்ற மழை நீரை வடியச் செய்ய வடிகால் வசதிக்கு ஏற்பாடு செய்தார். 
ஆய்வின்போது, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, ஒன்றிய துணைச் செயலர் செல்வகுமார், ஊராட்சிச் செயலர் சிவமுருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜசேகர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிகிருஷ்ணன், பிரதிநிதி கோவிந்தராஜ், வர்த்தகர் அணி சிவமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இளங்கோ, ஒன்றிய இளைஞரணி அன்பழகன், மாவட்டப் பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் கலைச்செல்வன், ஊராட்சி செயலர்கள் அறிவழகன், பன்னீர்செல்வம், மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகநாதன், ஊராட்சி எழுத்தர்கள் வடிவேல், செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்
தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com