முன்மாதிரி கிராம விவசாயிகளுக்கு மண்வள அட்டை விநியோகம்

தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மாதிரி கிராம விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில்  மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. 

தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மாதிரி கிராம விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில்  மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. 
கடலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் நிகழாண்டில் செயல்படுத்தப்படும் தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் தொகுப்பு மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்து மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் முதல் சுழற்சியின் கீழ் மண்மாதிரிகள் சேகரித்த கிராமங்களை தவிர்த்து மீதம் உள்ள கிராமங்களில் நடப்பு 2018-19-ஆம் ஆண்டில் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டடு கடலூர் மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 
தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் ஐந்து முன்னோடி கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கடலூர் வட்டத்தில் செல்லங்குப்பம் கிராமம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் திருச்சின்னபுரம், அண்ணாகிராமம் வட்டத்தில்  திராசு, நல்லூர் வட்டத்தில் கீழ்நெமிலி, மங்களுர் வட்டத்தில் புதுக்குளம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன.  இந்த கிராமங்களில் விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டு, மண்வள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளின் மண்வள அட்டை விவரங்கள் சம்பந்தப்பட்ட ஆதார் எண்களுடன் இணைப்பு செய்யப்பட்டு உர விற்பனை நிலையங்களில் உரம் வாங்கும் போது பயன்படுத்தப்பட உள்ளன. இந்த மண்வள அட்டைகளில் விவசாயிகள் சாகுபடி செய்ய உள்ள பயிருக்கு இடவேண்டிய உர அளவுகள் குறிக்கப்பட்டு இருக்கும். இதன்படியே விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்படும். அதன்படி, கடலூர் வட்டாரம் செல்லங்குப்பம் முன்னோடி கிராமத்தில் மண்வள அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை தலைமை வகித்து, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி வெவ்வேறு பயிர்களுக்கு உரம் இடும்முறைகள் குறித்து விளக்கினார். வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ஆர்.மோகன்ராஜ், பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் குறித்து விளக்கினார். கடலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகன் மண்வள அட்டையை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் ப.முகமது நிஜாம் தொகுப்பு மண்மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யும் முறைகள் குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் எம்.பிரபாகரன் நன்றி கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மு.கண்ணன், யு.அருண்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com