அக்.15 முதல் வேலைநிறுத்தப் போராட்டம்: நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

காலவரையற்ற ரேஷன் கடையடைப்பு போராட்டம் வருகிற அக்.15-ஆம் தேதி முதல் தொடங்கும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. 

காலவரையற்ற ரேஷன் கடையடைப்பு போராட்டம் வருகிற அக்.15-ஆம் தேதி முதல் தொடங்கும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது. 
இந்தச் சங்கம் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக, கூட்டுறவு சங்க ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற அக்.15}ஆம் தேதி முதல் காலவரையற்ற ரேஷன் கடையடைப்புப் போராட்டம் நடத்துவது என்று மாநாட்டில்
 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுவிநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானிய பொருள்களை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். 
பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருள்கள் அனைத்தையும் உரிய விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச் செயலர் ஆர்.கோபிநாத், நியாயவிலைக்கடை சங்க மாநில நிர்வாகிகள் கே.ஆர்.விசுவநாதன், டி.செல்லத்துரை, எஸ்.பிரகாஷ், துரை.சேகர், எஸ்.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முன்னதாக மாநில பொதுச் செயலர் ஜி.ஜெயசந்திரராஜா வரவேற்க, மாநில பொருளாளர் எஸ்.நெடுஞ்செழியன் நன்றி 
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com