பண்ருட்டியில் அணுகு சாலை அமைக்க வணிகர் சங்கப் பேரமைப்பு கோரிக்கை

பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைத்து போக்குவரத்தை சீரமைக்க  வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் டி.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.

பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைத்து போக்குவரத்தை சீரமைக்க  வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் டி.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பண்ருட்டியில் மளிகை பொருள், காய்கறி மொத்த வணிகம் செய்யும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இங்கு பல மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் பொருள்கள் வந்து சேரும். நகரில் போக்குவரத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. 
ஆனால், இதுவரை அணுகு சாலை அமைக்கவில்லை. நான்கு முனைச் சந்திப்பில் உள்ள சிக்னல் எரியவில்லை. அணுகு சாலை மற்றும் நான்கு முனைச் சந்திப்பில் சிக்னல் அமைக்கப்படும் என முன்னாள் ஆட்சியர், எஸ்பி ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், இது வரை அதற்கான பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
பண்ருட்டியில் 30-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. முகூர்த்த நாள்களில் நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பண்ருட்டியில் அணுகு சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். 
ஒருவழிப் பாதையை முறையாக நிர்வகிக்க வேண்டும். 
இதுதொடர்பாக அரசியல் கட்சியினர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்  அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com