இந்தி அரைத் திங்கள் விழா தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இரு வாரங்களுக்கு கொண்டாடப்படும் இந்தி அரைத் திங்கள்


என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இரு வாரங்களுக்கு கொண்டாடப்படும் இந்தி அரைத் திங்கள் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திய அரசு 14.09.1949 அன்று இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்தது. இதையொட்டி, ஆண்டுதோறும் செப்.14-ஆம் தேதி இந்தி மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான விழா நெய்வேலி கற்றல், மேம்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிறுவனத்தின் பொறுப்புத் தலைவர் ராக்கேஷ் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தார்.
விழாவில், சுரங்கம் மற்றும் மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் அனுப்பிய வாழ்த்து செய்திகள் முறையே இந்தி மொழிபெயர்ப்பாளர் ஆர்.ஷர்மிளா, இந்தி அதிகாரி ரஜினி லங்கா பாலி ஆகியோரால் வாசிக்கப்பட்டன.
இந்தி மொழியை அஞ்சல் வழி, நேர்முக வகுப்பு மூலம் பயின்று தேர்வு எழுதியவர்களில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நிறுவன இந்தி அலுவலர் என்.சரவணக்குமார் வரவேற்றார். இளநிலை இந்தி அலுவலர் ஜி.ரேணுகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com