பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.1.4 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 பேர் கைது

பெங்களூரிலிருந்து பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.1.4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரிலிருந்து பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.1.4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பெங்களூரிலிருந்து பேருந்தில் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டெல்டா பிரிவு ஆய்வாளர் நடராஜன், பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸார் பண்ருட்டி தட்டாஞ்சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை மறித்து சோதனையிட்டதில் 4 மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக, பேருந்தில் வந்த 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
 அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த எஸ்.யுவராஜ் (35), வாணியர் தெருவைச் சேர்ந்த கே.சீனிவாசன், கொரத்தி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமார் (33) எனத் தெரிய வந்தது. இவர்கள், பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸார், ரூ.1.46 லட்சம் மதிப்பிலான 8 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com