உலக மருந்தாளுநர்கள் தின விழா

தமிழ்நாடு மருந்தாளுநர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில், கடலூரில் உலக மருந்தாளுநர்கள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு மருந்தாளுநர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில், கடலூரில் உலக மருந்தாளுநர்கள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் சி.டி.முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் விழாவை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டி.வசந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எம்.கீதா, மருந்து ஆய்வாளர் வி.நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் பி.செல்வமணி, மாநிலப் பொருளாளர் கே.இளங்கோ, மாநில இணைச் செயலர் எஸ்.ராஜாராம், மருந்து கிடங்கு ஆய்வாளர் (ஓய்வு) சீனி.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்தில், மருந்தகங்கள், அறுவை அரங்கப் பொருள்களை முறையாக பராமரிக்க உரிய இட வசதி செய்துதர வேண்டும். மருந்தியல் விதி 1948-இன் படி மருந்துகள் மருந்தாளுநர்களால் மட்டுமே கையாளும் வகையில் அனைத்து துறைகளிலும், எம்.எம்.யூ. திட்டத்தில் நடமாடும் மருத்துவக் குழுக்களிலும் மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். காலியாக உள்ள 500 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிóட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி தலைமை மருந்தாளுநர் கே.குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com