புதுச்சேரி

புதுவையில் 5,358 பேர் முகாம்களில் தஞ்சம்

புதுவையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5,358 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

17-11-2018

புயல் சேதம் குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு: புதுவை அரசு அறிவிப்பு

புதுவையில் கஜா புயலால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக 2 அல்லது 3 தினங்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

17-11-2018

புதுவையில் 1,106 வீடுகள் சேதம்

கஜா புயலால் புதுவை மாநிலத்தில் 1,106 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5,358 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செüத்ரி தெரிவித்தார்.

17-11-2018

புதுச்சேரியில் சூறாவளிக் காற்றுடன் மழை: மின்துண்டிப்பால் மக்கள் அவதி

கஜா புயலின் காரணமாக புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இரவில் இருந்து மதியம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

17-11-2018

போலி நபர்களுக்கு புயல் நிவாரணம் வழங்குவதை தடுக்க கடும் நிபந்தனைகள்: கிரண் பேடி அதிரடி

புதுவையில் போலி நபர்களுக்கு புயல் நிவாரணம் வழங்குவதை தடுக்கும் வகையில், கடுமையான நிபந்தனைகளை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி விதித்துள்ளார்.

17-11-2018

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் தவிர்ப்பு: அமைச்சர் நமச்சிவாயம்

மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புதுச்சேரியில் புயல் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.

17-11-2018

புயல் சேதத்தை கணக்கிட ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அமைக்க அதிமுக வலியுறுத்தல்

கஜா புயல் சேதத்தை கணக்கிட ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் வலியுறுத்தினார்.

17-11-2018

மானிய நிதியிலிருந்து அரசு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வாய்ப்பு இல்லை: கிரண் பேடி திட்டவட்டம்

புதுவையில் மானிய நிதியில் இருந்து அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு போனஸ், ஊதியம் வழங்க வாய்ப்பு இல்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திட்டவட்டமாக அறிவித்தார்.

17-11-2018

பிப்டிக் வாராக் கடன் ரூ.106 கோடியை வசூலிக்க வலியுறுத்தல்

புதுவை பிப்டிக் நிறுவனத்தின் வாராக் கடன் தொகை ரூ.106 கோடியை வசூலிக்க உடனடி நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் கிரண் பேடி,

17-11-2018

ஜிப்மரில் வெளி நோயாளிகளுக்கு மேற்கூரை வசதி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் அமர்வதற்காக சுமார் ரூ. 8 லட்சம் செலவில் திறந்த இடத்தில் மேற் கூரைஅமைக்கப்பட்டுள்ளது.

17-11-2018

சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ நிலையத்தில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

17-11-2018

புதுவை பல்கலை. பேராசிரியைக்கு விருது

புதுவை பல்கலைக்கழக பேராசிரியை சுபலட்சுமிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது கிடைத்துள்ளது.

17-11-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை