விளைநிலங்களை பாதுகாக்க நில பயன்பாட்டுக் கொள்கை தேவை: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதுச்சேரியில் நில பயன்பாட்டுக் கொள்கையை உருவாக்கி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
விளைநிலங்களை பாதுகாக்க நில பயன்பாட்டுக் கொள்கை தேவை: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதுச்சேரியில் நில பயன்பாட்டுக் கொள்கையை உருவாக்கி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


 புதுச்சேரி யூனியன் பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில உரிமை மற்றும் மக்கள் நலனுக்கான அரசியல் மாநாடு, தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.


 பிரதேசச் செயலர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். தா.முருகன் முன்னிலை வகித்தார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொடக்கவுரை ஆற்றினார்.


 மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் துரை.ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டின் நிறைவில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:


 புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உரிய அதிகாரம் இல்லாமல் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் மீறி, அனைத்துத் துறைகளிலும் தனது அதிகார வரம்பை மீறி துணை நிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.


 புதுச்சேரியில் மொத்தம் உள்ள 12.5 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 26 சதவீதம் அதாவது 3.28 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். 181 சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் புதுவையை விட்டு சென்று விட்டன. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அளவுக்கு மீறி உள்ளது. மாநில அரசு உரிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.


 புதுவையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி உள்ளிட்டவை முற்றிலும் வணிகமயமாகி விட்டன. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் தொடர்ந்து வலியுறுத்தும். புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், விவசாயத்தைத் தவிர வேறு வகைகளில் மாற்றப்பட்டுள்ளது. இதனால், விவசாயமே நசிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதுவை அரசு விரைவில் நிலப்பயன்பாட்டுக் கொள்கையை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com