தீபாவளி தினத்தில் புதுச்சேரி-யஷ்வந்த்பூர் இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் இருந்து யஷ்வந்த்பூருக்கு சிறப்புக் கட்டண ரயில் வருகிற 29ஆம் தேதி (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் இருந்து யஷ்வந்த்பூருக்கு சிறப்புக் கட்டண ரயில் வருகிற 29ஆம் தேதி (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (எண்.06576) அன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 8.55 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் இரண்டாம் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி 2, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் 3, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 6, சரக்கு மற்றும் பிரேக் வேன் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், சேலம் டவுன், சேலம், குப்பம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பனஸ்வாடி வழியாகச் செல்லும்.
எதிர் முனையில் யஷ்வந்த்பூரில் இருந்து புதுச்சேரிக்கு 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்புக் கட்டண ரயில் (எண். 06575) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலிலும் இரண்டாம் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி 2, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் 3, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 6, சரக்கு மற்றும் பிரேக் வேன் 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், சேலம் டவுன், ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக செல்லும். இச்சிறப்புக் கட்டண ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
புதுச்சேரி-புதுதில்லி விரைவு ரயில்: புதுச்சேரியில் இருந்து புதுதில்லி செல்லும் விரைவு ரயில் (எண்.22404-22403) கூடுதலாக இரண்டு படுக்கை வசதி கொண்ட பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த விரைவு ரயிலில் மொத்தம் 2 சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் உள்பட 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகவலை தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com