மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? வேளாண் துறை நாளை பயிற்சி

புதுச்சேரி வேளாண் துறை சார்பில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

புதுச்சேரி வேளாண் துறை சார்பில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 இது குறித்து புதுச்சேரி அரசு வேளாண்துறை தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 புதுச்சேரி அரசு வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் நகர்ப்புற மாடித்ú தாட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் இடு பொருள்களான செடி வளர்க்கும் பை, மண், விதைகள், நாற்றுகள், வேப்பம்புண்ணாக்கு, பூவாளி, கைத்தெளிப்பான், களை கொத்தும் கருவி ஆகியவை மானிய விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.
 இத்தோட்டத்தால் புதுச்சேரி வாó நகர் புற மக்கள் பயனடையும் வகையில் புதுச்சேரி அரசு வேளாண் துறை கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில தேசியத் தோட்டக்கலை இயக்கமும் இணைந்து செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அன்னை தெரெசா செவிலியர் கல்லுôரி கலந்தாய்வு கூடத்தில் வீட்டு மாடியில் காய்கறித்தோட்டம் அமைப்பது மற்றும் இயற்கை வழியில் சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 மாடித்தோட்டம் அமைப்பதற்கான விண்ணப்பம் அளித்தவர்களும் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க ஆர்வமுள்ளவர்களும் கலந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com