கிரண் பேடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற 32 விவசாயிகள் கைது

புதுவையை அடுத்த காட்டேரிக்குப்பம் திரெளபதி அம்மன் கோயில் குளத்தைப் பார்வையிடச் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற

புதுவையை அடுத்த காட்டேரிக்குப்பம் திரெளபதி அம்மன் கோயில் குளத்தைப் பார்வையிடச் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 32 விவசாயிகளை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, கடந்த வாரம் புதுவை வரதராஜபெருமாள் கோயில் குளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், கோயில் குளங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், இதுதொடர்பான விவரங்கள் ஆளுநர் மாளிகை இணையதளத்தில் பதியப்படும் எனத் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை பத்துக்கண்ணு அருகேயுள்ள காட்டேரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயில் குளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கிருந்து வரும்போது, திடீரென 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
விவசாயக் கடன் ரூ. 22 கோடி தள்ளுபடி உள்ளிட்ட கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததைக் கண்டித்து, விவசாயிகள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். காட்டேரிக்குப்பம் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, 32 பேரைக் கைதுசெய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com