சர்வதேச மருத்துவ அறிவியல் மாநாடு

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சார்பில், அறிவு என்ற பெயரில் சர்வதேச மருத்துவ அறிவியல் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சார்பில், அறிவு என்ற பெயரில் சர்வதேச மருத்துவ அறிவியல் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டைத் தொடக்கிவைத்து மருத்துவர் பான் பேசியதாவது: மாணவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள அவர்கள் கல்வி பயிலும் காலமே உகந்ததாக இருக்கும். மேலும், தரமான மருத்துவக் கல்வி, பல்வேறு துறை சார்ந்த அறிவு, திறன்களை மாணவர்கள் பெறுவதற்கான வழிவகை அமைய வேண்டும். அதன் மூலமே பலதுறை சார்ந்த அறிவை ஒருங்கிணைத்து வழங்க முடியும்.
மருத்துவம் பயிலும் மாணவர்கள் தங்களை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டு, நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.
மாநாட்டுக்கு முன்னிலை வகித்த ஜிப்மர் இயக்குநர் பரிஜா பேசியதாவது: ஜிப்மரின் புதுமையான பாடத் திட்டம் நாட்டுக்கே முன்னோடியாக உள்ளது. இதன் மூலம் நவீன ஆரோக்கிய முறைகளைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களைக் களைய முடியும் என்றார் அவர்.
இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் மு.ஆ.செரியன், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரெலா ஆகியோர் தங்களுடைய மருத்துவ வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மருத்துவக் கண்காணிப்பாளர் ஜெ.பாலச்சந்தர், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், ஆராய்ச்சி முதல்வர் விஷ்ணுபட், ஜிப்மர் - காரைக்கால் கல்லூரி முதல்வர் ஜிகே.பால், ஆலோசகர் லதா சதுர்வேதா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பல்வேறு மருத்துவ அறிவியல் வல்லுநர்கள் தங்களது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மாநாட்டில் அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிப்பது, மருத்துவ விவாதங்கள், வினாடி - வினா, இணையவழி கருத்தரங்கு, கருத்துப் பட்டறைகள், காப்புரிமை தொடர்பான குழு விவாதங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com