பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல்: இன்று புதுவையிலும் வாக்குப்பதிவு

பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ள நிலையில், புதுவையிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ள நிலையில், புதுவையிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் பிராங்கோயிஸ் பைலான், பெனாய்ட் ஹாமன், மரைன் லி பென், இம்மானுவேல் மக்ரான், ஜீன் லக் மெலன்சினான் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) நடைபெறுகிறது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களில் அதிபரை நிர்ணயிப்பதற்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு உள்பட்ட புதுச்சேரி, தமிழகம், கேரளம், அந்தமான் நிகோபார், லட்சத் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பிரெஞ்சு நாட்டவர்கள் வாக்களிக்கலாம். ஏறக்குறைய 5,000 வாக்காளர்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ள 6 மையங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைத் தூதரகம், அலையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் தலா 2 வாக்கு மையங்கள், காரைக்கால், சென்னையில் தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com